தஞ்சை பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன்.

தஞ்சையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சாந்தி திரையரங்கில் சினிமா ரசிகர்களுடன் பார்த்த நடிகர் பார்த்திபன்.
திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசினார் பொன்னியின் செல்வன் மிகச்சிறப்பான படம் என்றும் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய், உள்ளிட்ட நட்சத்திரங்களை வெகுவாக பாராட்டியவர்

சினிமா பார்த்து விட்டு மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பார்த்திபனுக்கு குதிரையாட்டம், மயிலாட்டம், கரகாட்டத்துடன் ரசிகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
தஞ்சை மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோரும் வரவேற்றனர்

தொடர்ந்து பார்த்திபன் ராஜராஜ சோழனினின் சிலைக்கு மாலை அணிவித்து சோழ மான்னன் ராஜராஜனை வணங்கினார்.
மேயர் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோரும் ராஜராஜனுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பெரிய கோயிலுக்கு சென்றவர் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து பேட்டியளித்த பார்த்திபன் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய வெற்றிப்படம் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் என்று வெகுவாக பாராட்டினார்.
