தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை.

தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6,786 உறுப்புகள் தேவைப்படுகிறது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னோடியாக திகழ்வதாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேட்டி.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 3ஆம் தேதி சாலை விபத்து ஏற்பட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மூளைச் சாவு அடைந்து விட்டதால்,
அவரது குடும்பத்தினரிடம் உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதய வால்வு ஆகிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
அவருடைய சிறுநீரகம் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கம் பொருத்தப்பட்டது.
மேலும் இதய வால்வுகள் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கம் கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் சிறுநீரகத்திற்காக 6,290 நபர்களும், கல்லீரல் உறுப்புக்காக 347 நபர்களும், இருதயத்திற்காக 43 நபர்களும், இரண்டு நுரையீரலுக்காக 49 நபர்களும், இருதயம் மற்றும் நுரையீரலுக்காக 32 நபர்களும்,
கணையத்திற்காக இருவரும், கை மாற்று சிகிச்சைக்காக 23 நபர்களும் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். 6,7860உடல் உறுப்புகள் தேவைப்படுகிறது.
உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னோடியாக திகழ்வதாக அவர் தெரிவித்தார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக செய்தது குறிப்பிடத்தக்கது.