BREAKING NEWS

தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம்

தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம்

தமிழகத்தில் முதல் முறையாக நகரசபை மாநகரசபை கூட்டம் நடத்திட உத்தரவிட்ஞதையடுத்து தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 1 பள்ளியக்ரகாரம் பகுதியில் நடைபெற்று வரும், பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

 

 

 

திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 

 

ஏராளமான அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான வசதிகள், குடிநீர், சாலை வசதி, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவைகளை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

 

 

கூட்டத்தில் பங்கேற்ற சிறுமி ஒருவர் விளையாட்டு மைதானம், கழிவரை உள்ளிட்டவைகள் தேவை என வலியுறுத்தி பேசியது அனைவரின் கவனத்தையும் பெற்றது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )