தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த . 70 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திப் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று வடவாறில் கரைக்கப்பட்டது.

விநாயகா சதுர்த்தியை முன்னிட்டு. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 70 விநாயகர் சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்திப் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று வடவாறில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சை மாநகரில் முக்கிய சந்திப்புகள் 70 இடங்களில் இரண்டு அடி முதல் 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இன்று அனைத்து சிலைகளும் தஞ்சை ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.
அங்கு இருந்து கைகளில் தீச்சட்டி ஏந்தியபடி தேவராட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், சுருள்வால் வீச்சு, உறுமி மேளம், என தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வடவாறில் கரைக்கப்பட்டன.
இதனையொட்டி, பாதுகாப்புக்கு ஏராளமான போலிசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்