BREAKING NEWS

தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

தஞ்சாவூர்

 

தஞ்சை மாநகராட்சி உடன் இணைந்து தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

 

 

இதன் மூலம் குற்றமில்லா நகரமாக தஞ்சை விளங்க பெரிதும் பயன் படும் என காவல் ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் உறுதி.

 

 

தஞ்சை மாநகராட்சி சார்பில் தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க 1400 கண்காணிப்பு கேமராக்கள் மாநகரம் முழுவதும் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

 

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள அதிநவீன 4 கேமராக்கள் பொருத்தப்பட்ட நடமாடும் கண்காணிப்பு வாகனம் இன்று காவல்துறை பயன் பாட்டிற்க்காக வழங்கப்பட்டது.

 

சதய விழா நிகழ்ச்சிக்கு வரும் வாகனம், விதிகளை மீறி செல்லும் வாகனம், கூட்ட நெரிசலை கண்காணிக்கும் வகையில் தஞ்சை பெரிய கோயில் அருகே நிறுத்தப்பட்டு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் 360 டிகிரி கோணத்தில் முற்றிலும் கண்காணித்து பதிவு செய்யப்படுகிறது.

 

 

இப்பணிகளை இன்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆய்வு செய்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )