BREAKING NEWS

தஞ்சை மாமன்ற மாதாந்திர கூட்டத்தில் வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு.

தஞ்சை மாமன்ற மாதாந்திர கூட்டத்தில் வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு.

வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என கூறிய குற்றச்சாட்டுக்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மேயர் ஆதாரத்துடன் நிருபித்து உறுப்பினரின் மூக்கை உடைத்தார்.

 

தஞ்சை மாமன்ற மாதாந்திர கூட்டம் மேயர் சண் ராமநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய 43வது வார்டு காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஹைஜாக் கனி தனது வார்டுக்கு உட்பட்ட தெருவில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமப்படுவதாக பேசினார்.

 

 

உடனடியாக மேயர் கூட்ட அறையில் இருந்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 43வது வார்டுக்கு குப்பைத்தொட்டிகள் வச்சாச்சா எத்தனை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

 

என கேட்டார். செல்போனை ஸ்பிக்கரில் போட்டு மைக் முன் வைத்து உறுப்பினர்கள் அனைவரும் கேட்கும்படி செய்தார். சம்பந்தப்பட்ட அலுவலர் 43வது வார்டுக்கு 8 குப்பைத் தொட்டிகள் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

 

 

5 தொட்டிகள் வைப்பதுதான் வழக்கம். ஆனால் 8 தொட்டிகள் உங்கள் வார்டுக்கு வைக்கப்பட்டுள்ளதாக உறுப்பினருக்கு தெரிவித்து அவரது மூக்கை உடைத்தார் மேயர்.

 

அப்போது தெரிந்தது 43வது வார்டு உறுப்பினர் ஹைஜாக் கனி வார்டு பக்கமே போவதில்லை என்றும். வெற்றி பெற்று சான்றிதழ் வாங்கியவர் அதன்பிறகு வார்டு பக்கம் திரும்பி பார்த்ததில்லை என தெரிந்தது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )