தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் 1420 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம்,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைஅடுத்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதனால் தாழ்வான இடங்களில் நெர்ப்பயிர்கள் மூழ்கி வருகிறது தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை ஒரு லட்சத்தி பத்தாயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகள் முடிந்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கொடிக்காலூர் ,திட்டை, மெலட்டூர் ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது இது குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 568 ஹெக்டேரில் அதாவது 1420 ஏக்கரில் சம்பா பயிர்களை மழைநீர் சூழ்ந்தும் பல இடங்களில் மூழ்கியும் சாய்ந்தும் உள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மழை பெய்தால் கூடுதல் பயிர்கள் மூழ்கி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் வேளாண்மை உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பயிர் பாதிப்புகளை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
பல இடங்களில் நடவு செய்து ஒரு வாரம் பத்து நாட்கள் மட்டுமே ஆகியுள்ள இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அழுகிவிடும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.