தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.

இட ஒதுக்கீட்டு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை கலைஞர் போன்றவர்களை விமர்சனம் செய்யாமல கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையாக பேச வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் அண்ணாமலைக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் செஞ்சி.மஸ்தான் 162 கிறிஸ்துவ, இஸ்லாமிய பயணாளிகளுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பில் தையல் எந்திரம், விலையில்லா கிரைண்டர், மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செஞ்சி. மஸ்தான், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி நீண்ட காலம் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க சட்டரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது அதன் மூலம் விரைவில் விடை காண முடியும் என்றார்.
இந்தியாவிலேயே சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பும், அமைதியான சூழலும் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது என கூறினார்.
அண்ணாமலை கல்வி அறிவை பெற்றது அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால்தான்.
இட ஒதுக்கீட்டு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை விமர்சனம் செய்யாமல் கடந்த கால வரலாற்றை படித்து மேன்மையாக பேச வேண்டும் என அண்ணாமலைக்கு அமைச்சர் செஞ்சி. மஸ்தான் அறிவுரை வழங்கினார்.
நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்