BREAKING NEWS

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மதர் தெரசா பவுண்டேசனுடன் இணைந்து சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் புதியவீடு பயனாளர்க்கு அற்பணிப்பு.

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மதர் தெரசா பவுண்டேசனுடன் இணைந்து சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் புதியவீடு பயனாளர்க்கு அற்பணிப்பு.

தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் கடந்த 21 ஆண்டுகளாக பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறது.மதர் தெரசா பவுண்டேசன் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தினர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதத்தோறும் அரிசி, மளிகை பொருட்கள், மருந்து மாத்திரைகள் அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் வழங்கி வருகிறது.

சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சொந்த வீடு இல்லாத மிகவும் நலிவற்ற குடும்பத்தினருக்கு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மதர் தெரசா பவுண்டேசன் வீடுகட்டித் தரும் பணியையும் செய்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு தாலுகா சின்னபொன்னாப்பூரைச் சேர்ந்த தனிஸ்லாஸ்க்கு இரண்டு மகள்கள்,இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் இருக்க.

 

இடமும், வீடும் இல்லாமல் பிள்ளைகள் பெரியவர்கள் ஆன நிலையில் தன்னுடைய உறவினர்களுடன் பக்கத்து கிராமத்தில் தனி வீடு இல்லாமல் வாழ்ந்து வந்தார்.

 

 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை அணுகி நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டு வீடு இல்லாமல் இருக்கும் அவல நிலையை மகன்கள் சதீஷ், சுரேஷ் கூற கஷ்ட நிலையை உணர்ந்த ஆட்சியர் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர திட்டமிட்டு இலவச வீட்டு மனை பட்டாவினை வழங்கினார்.

 

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படி தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் தனிஸ்லாஸ்க்கு வீடு கட்டித்தரும் பணியை ஏற்று வீட்டிற்க்கு ஆகும் மொத்த செலவு தொகை௹ 5 இலட்சத்து 50 ஆயிரம் இதில் தமிழக அரசு ஒதுக்கீடு ரூ2 இலட்சத்து 10 ஆயிரம், உதவித் தொகை௹ 3 இலட்சத்து 40 ஆயிரத்தை மதர் தெரசா பவுண்டேசன் சொந்த செலவில் தேரடி பார்வையில் வீட்டை கட்டிமுடித்தது.

 

பவுண்டேசன் தலைவர் சவரிமுத்துதலைமை வகித்தார்.மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீட்டில் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

 

அறங்காவலர்கள் சம்பத்ராகவன், கோவிந்தராஜ், முரளிகிருஷ்ணன், ஓரத்தநாடு ஒன்றிய குழு தலைவர் பார்வதி சிவசங்கர்,ஓரத்தநாடு வட்டாட்சியர் சீமான்,

 

ஓரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் (வ.ஊ) ரகுநாதன் (கி. ஊ) ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, சின்னபொன்னாப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுருநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

தகவல் துறை அலுவலர் ஜார்ஜ், திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி தன்னார்வலர்கள் மகேஷ்வரன், ராஜா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )