தடைசெய்யப்பட்ட 209.கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.
மூலக்கரைப்பட்டியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது. 209 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.
நெல்லை மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நேரு தெருவை சேர்ந்த ஜோசப்(50)என்பவர் மூலக்கரைப்பட்டி பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
ஜோசப் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நாங்குநேரி வட்ட காவல் ஆய்வாளர் செல்வி, மூலக்கரைப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆழ்வார், தலைமையிலான போலீசார் கடை மற்றும் வீட்டை சோதனை செய்ததில் 209 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேற்படி போலீசார் ஜோசப்பை கைது செய்து 209 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
CATEGORIES Uncategorized
TAGS குற்றம்தடை செய்யப்பட்ட புகையிலைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்நெல்லைபுகையிலை கடத்தல்முக்கிய செய்திகள்