தனியார் மின் பணியாளர்கள் உறுப்பினருக்கு காப்பீட்டு திட்டம் விண்ணப்பம் வழங்கல்.

இராமநாதபுரம் மாவட்டம் தனியார் மின் பணியாளர்கள் சங்கம் (பதிவு எண் 139/2022) முதுகுளத்தூர் கிளையின் சங்கத்தில், இந்திய அஞ்சல் துறையில் அறிமுகம் செய்யப்பட்ட விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு,
எங்களது கிளையில் தவறாது சங்க கூட்டத்திற்கு வருகை தந்து சந்தா செலுத்திய 30 உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்தியன் போஸ்ட் பேமெண்ட் வங்கியின் இராமநாதபுரம் மாவட்ட முதுநிலை மேலாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில்,

இராமநாதபுரம் மாவட்ட தனியார் மின் பணியாளர்கள் சங்கம், மாவட்ட இணைச் செயலாளர் திரு.P.அப்துல் அஜீஸ், மாவட்ட துணைத் தலைவர் திரு.கர்ணன், கிளைக்தலைவர் திரு.சம்சுதீன் சேட் கிளைச் செயலாளர் திரு.மோகன்ராஜ் கிளை பொருளாளர் திரு.பாலமுருகதாஸ் ஆகியோர் முன்னிலையிலும்,

மேற்குறிப்பிட்ட விபத்து காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் பதிவு செய்து அவர்களுக்கான காப்பீட்டு திட்டம் நமது சங்கத்தின் மூலம் முதல் தவணை பணம் செலுத்தி அவர்களுக்கான அங்கீகார விண்ணப்பம் பதிவு செய்து வழங்கப்பட்டது.
