BREAKING NEWS

தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு

தனியார் விதை விற்பனை நிலையங்களில்  வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் பாலாஜி மற்றும் வேலூர் விதை ஆய்வாளர் கௌதமி ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

 

திமிரி வட்டாரம் கலவையில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ள நெல் மற்றும் உளுந்து குவியல்களில் இருந்து 12 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முளைப்புத் திறன் பகுப்பாய்வு செய்யும் பொருட்டு விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது பருவத்திற்கு உகந்த விதைகள் தான் விற்பனை செய்யப்படுகிறதா என உறுதி செய்யப்பட்டது.

 

மேலும் விதை விற்பனை நிலையங்களில் பராமரிக்கப்படும் விதை இரும்பு பதிவேடு, விதைகளின் பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், பதிவுச் சான்று நகல், விதைகள் கொள்முதல் பட்டியல், விலைப்பட்டியல், பில் புத்தகம், ஆகியவைகளை பார்வையிட்டனர். மேலும் பட்டியல் புத்தகத்தில் விவசாயிகளின் முழுமையான விபரம் பதிவு செய்து கையொப்பம் பெறப்பட்டுள்ளதா என்பதனை சரி பார்த்தனர்.

விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு விதை குவியலுக்கும் உற்பத்தியாளரிடம் இருந்து பெறப்பட்ட முளைப்புத் திறன் முடிவு அறிக்கை பெற்று பராமரிக்குமாறும், விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் முளைப்புத் திறன் தட்டு பராமரிக்குமாறும் விற்பனையாளர்களுக்கு, அறிவுறுத்தினர்.

 

முன்னதாக ஆற்காடு வட்டத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் சீனிவாசா விவசாய சேவை மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது விற்பனை செய்யப்படும் விதைகளின் முளைப்புத் திறன் முடிவுகள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டது. மேலும் விதை குவியல் உண்மை இருப்பும், பதிவேட்டின் இருப்பும் சரியாக உள்ளதா என பார்க்கப்பட்டது.

 

அப்போது துணை இயக்குனர் பாலாஜி, விற்பனை நிலையத்தில் இருந்த விவசாயிகள் இடத்தில் பேசுகையில் கோடை காலத்தில் குறுகிய கால பயிர் செய்வது தொடர்பான அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS