தன் நிறுவனத்தில் வேலை செய்யும் கர்ப்பிணி பெண்ணிற்கு ஊழியர்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாய் அப்பல்லோ கல்வி நிறுவனம் கடலூர் மாவட்டம் வேப்பூர், பண்ருட்டி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை போன்ற பகுதிகளில் இயங்கி வருகிறது.வேப்பூரில் இயங்கும் நிறுவனத்தில் சுஷ்மிதா என்ற கர்ப்பிணி விரைவுரையாளர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒன்றிணைந்து சுஷ்மிதாவிற்கு வளைகாப்பு விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்து நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர் தங்கதுரை தலைமையில் சுஷ்மிதாவுக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புனித தேவகுமார் கலந்துகொண்டு சுஷ்மிதாவிற்கு வளையல் அணிவித்து வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அம்பிகா தங்கதுரை, கல்லூரியின் முதன்மை அலுவலர் சரஸ்வதி, சாய் அப்போலோ கல்வி நிறுவனங்களின் உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி, முதல்வர்கள் ஆனந்த ஜோதி, செவ்வந்தி,
சண்முகப்பிரியா மற்றும் சரிதா சுபாஷினி, அபிராமி, ஜெயஸ்ரீ ஆனந்த ஜோதி மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுஷ்மிதாவிற்கு வளையல் அணிவித்து வளைகாப்பு விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.