BREAKING NEWS

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது

செய்தியாளர் சங்கர நாராயணன்.

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் அதற்கு மாற்றாக பயோபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 

தச்சநல்லூர் மண்டல சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் பணியாளர்கள் பழக்கடை, பேக்கரி, இனிப்பகம் உள்ளிட்ட பல்வேறு கடை களில் ஆய்வு செய்தனர்.

 

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய வியாபாரிகளிடம் இருந்து 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இது போன்று இனி பயன்படுத்த கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது.

 

இதனால் சில இடங்களில் வியாபாரிகளுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )