தமிழகத்தில் திரை துறைக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கும் மட்டுமே முதலமைச்சர் முன்னுரிமை தருவதாகவும் தொழில் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் கோவர்த்தனன் குற்றம் சாட்டி உள்ளார்……

பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் அவ்மைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து செய்தார்களுக்கு பேட்டி அளித்த கோவர்த்தனன் மற்றும் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம் சாட்டினர். ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணமாக தொழில் துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள சூழலில் மின் கட்டண உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மின்கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தமிழகத்தில் எந்த ஒரு திட்டமும் சரிவர நிறைவேற்றப்படவில்லை எனவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது மகனுக்காக திரை துறையையும் தனது மருமகனுக்காக ரியல் எஸ்டேட் துறையையும் மட்டுமே மேம்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியதுடன் நலிந்திருக்கும் தொழில் துறையை மேம்படுத்த எந்த ஒரு நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் கோவர்த்தனன் விமர்சித்தார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆளுங்கட்சி தொடர்பான ஆதரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தே முதலமைச்சர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருவதாக விளம்பரப்படுத்தி வருவதாகவும் கூறினார். கோவையில் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டி சட்டத்திற்கு விரோதமாக திமுகவினர் நடந்து கொண்டு அதனை தட்டி கேட்ட பாஜகவின் மீது காவல்துறையினரை வைத்து வழக்கு பதிவு செய்வதாக கூறியதுடன் மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றாமல் தங்களுக்காக மட்டுமே முதலமைச்சர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்….