BREAKING NEWS

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த  சதி  திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறையில் சிக்கிய ஐஎஸ் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஆங்காங்கே தீவிரவாத தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட பல்வேறு தீவிரவாத குழுக்கள் முயன்று வருகின்றன. அதேபோல் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடு ரயில் நிலையம் அருகே கைது செய்ய முயன்ற போலீசார் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த சாதிக் பாஷா, ஜாபர் அலி கோவையை சேர்ந்த முகம்மது ஆசிக், காரைக்காலைச் சேர்ந்த இர்பான் சென்னையைச் சேர்ந்த ரஹமத் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் உள்ள இந்த கும்பலுக்கு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாகவும், மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதில் சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சமூக வலைதளம் மூலம் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததும் அம்பலமாகியுள்ளது. அதேபோல் சில இடங்களில் ரகசிய கூட்டங்களில் நடத்திய துண்டுப்பிரசுரங்களை வழங்கியதாகவும், தேசிய புலனாய்வு முகமைக்கு தெரியவந்துள்ளது. எனவே தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் தொடர்புடைய 8 இடங்களில் என்னைய தேசிய புலனாய்வு முகமை தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது.

 

சென்னை மண்ணடி கொருக்குப்பேட்டை என மூன்று இடங்களிலும் மயிலாடுதுறை, காரைக்கால், கோவை என மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு நிதியுதவி எங்கிருந்து வருகிறது என்பதற்கான உரிய ஆதாரங்களை திரட்டும் பணியில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்களை யார் வழங்கியது என்பதற்கான ஆவணங்கள் திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் மேலும் இவர்களுக்கு பின்னணியில் யார் உள்ளனர் தகவலும் சேகரிக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )