தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மண்ணைக்கவும் என பேசிய அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி

ராணிப்பேட்டை மாவட்டம்: ஆற்காடு தொகுதி கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு திமிரி ஒன்றிய கழக செயலாளர் சொரையூர் குமார்,தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட கழக செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறாடா சு.ரவி, கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் பேசிய எதிர்கட்சி சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறாடா சு.ரவி
தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 350 கோடி ரூபாய் கொடுத்து வாக்காளர்களை விலை வாங்கி வெற்றி பெற்ற திமுக வருகின்ற நாடாளுமன்றத்தில் 40 தொகுதிகளில் டெபாசிட் இழக்க போகிறது என தெரிவித்தார்.
மேலும் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்தவர் மு.க ஸ்டாலின் எனவும் வருகின்ற நாடாளுமன்றத்தில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என இவ்வாறு பேசினார்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.