தமிழகம் போதைப் பொருள் நடமாட்டத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் மாநிலமாக உள்ளது என கோவில்பட்டியில் ஜி.கே வாசன் பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன், கோவில்பட்டியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இன்று திருமுருகன் இல்லத்துக்கு சென்று மணமக்களை வாழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் பாய் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். அவர் இல்லத்திற்கு சென்று அப்துல் ரசாக் பாய் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர் விஜயசீலன், நெல்லை மாவட்ட தலைவர் சித்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை, நகரத் தலைவர் ராஜகோபால், வட்டாரத் தலைவர் ஆழ்வார் சாமி, நகர செயலாளர் மூர்த்தி, இளைஞர் அணி மாவட்டத் தலைவர் தலைவர் கனி,மாணவரணி செயலாளர் முத்துராமலிங்கம், நகர செயலாளர் செண்பகராஜ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் :
இந்துக்கள் குறித்து ஆர் ராசா பேசியது ஏற்புடையதல்ல அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
மின் கட்டணம் உயர்வு என்பது கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை விட ஷாக்கை விட மின் கட்டண உயர்வு ஷாக் மக்களை பாதித்துள்ளது.
திமுக அரசு வாக்குறுதிகள் மூலம் வந்த அரசு ஆனால் வாக்குறுதியை செய்ய தவறிய அரசாக உள்ளது.

கொரோனாவுக்கு காலகட்டத்துக்கு அப்புறம் மக்கள் பொருளாதார ரீதியாக படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் மக்களை குறிவைத்து மக்களை தாக்குவது போல அரசு வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு சுமையை மக்கள் மீது வைத்திருப்பது மக்கள் மீது அக்கறையில்லாமல் செயல்படும் அரசாகவும் மக்களை புரிந்து கொள்ளாத அரசாகவும் உள்ளது என்பதற்காக எடுத்துக்காட்டாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக அரசு ஒன்றரை ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர் ஆகையால் வருகின்ற காலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்மறையான
ஓட்டுக்கள் எதிர்க்கட்சிகளுக்கு விழுவதால் சாதகமாக அமையும்
இப்போது என்ன மாடல் என்றால் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் பண்ணுவது தான் இதனால் இந்த கட்சிக்கு என்னென்ன பலம் என்ன என்பது தெரியாமல் தம்பட்டம் அடிக்கிறார்கள்.
ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அப்படி செய்வது கிடையாது தனித்தே தங்களது பணியே செய்து தங்களை ஒவ்வொரு இடத்திலும் காட்டிக்கொண்டிருக்கும் வெற்றி தோல்விகளை தாண்டி கூட்டணியைத் தாண்டி
ராகுல்காந்தி நடைபயணம் கட்சிக்கு வேணா பிரயோஜனமும் இருக்கலாம் ஆனால் நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை
தனியார் பேருந்துகளில் கண்மூடித்தனமான கட்டணங்கள் இருக்கக் கூடாது இது மக்களை பாதிக்கிறது தனியார் பேருந்து லாபத்தை பார்க்க வேண்டுமே தவிர அதில் லாபத்தை பார்க்க கூடாது.
தமிழகம் போதைப் பொருள் நடமாட்டத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் மாநிலமாக இருப்பது வேதனைக்குரியது வெட்கக்கேடானது.

பத்திரிகை செய்திகளை பார்க்கும்போது சிறியவர்கள் பெரியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் கல்லூரி, பள்ளிக்கருகே மாணவர்கள் போதையில் இருப்பதை பார்த்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் காவல்துறையினர் கையை கட்டி போட வேண்டாம் இதற்கு என்ன காரணம் ஏன் போதைப் பொருள்கள் நடமாட்டம் இன்னும் தமிழகத்தில் இருக்கிறது.
அரசாங்கத்தின் இயலாமை காரணமாக சில அமைச்சர்கள் போதைப் பொருட்கள் துறைமுகத்தில் இருந்து வருவதாக கூறி வருகின்றனர் தவறான செய்திகளை சொல்லி மக்களை திசை திருப்ப வேண்டாம் உண்மையிலேயே போதை பொருள் இருக்குமேயானால் இரும்பு கொண்டும் ஒடுக்கும் இடத்தில் அரசு உள்ளது இதிலிருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை இதனை முறையாக சரியாக உறுதியாக செய்ய வேண்டுமென தமாக வலியுறுத்துகிறது.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அரசு தடை செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்கள் கூறி வருகிறோம் ஏன் இதில் அரசு இவ்வளவு நாள் எப்படி அனுமதி அளித்து வருகிறது இதன் பின்னணி என்ன இதில் யார் சம்பா இருக்கிறார்கள் எதற்காக அரசு இசைவு செய்கிறது.
இதற்கு எதற்கு மக்கள் கருத்து இது தொடர்ந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் இதனுடைய பின்னணி என்ன என்பதற்கு சந்தேகப்படும் அளவிற்கு இது உள்ளது என கூறினார்.
