BREAKING NEWS

தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 40 மாவட்டங்களில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தமிழக அரசுக்கு வேண்டுகோள்.

தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 40 மாவட்டங்களில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தமிழக அரசுக்கு வேண்டுகோள்.

 

அகில இந்திய ராஜா குலத்தோர் பேரவையின் நிறுவனர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் ராஜகுலத்தோர் பேரவை சார்பாக மனு கொடுக்கப்பட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தமிழக அரசின் ஜாதி பட்டியலில் எங்கள் சமூகத்திற்கு மட்டும் ஜாதியை குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் வழங்குவது மிகவும் வேதனைக்குரிய செயலாக உள்ளது.

 

இது எங்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட அவமானமாக உள்ளது. தமிழக அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பிரிவில் வரிசை எண்- 38 மற்றும் ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வரிசை எண்- 156 ஆகியவற்றில் கீழ்க்கண்டவாறு எங்கள் சமூகம் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.

 

இதில் அகஸா, மடிவாளா, ஏகாளி ,ராஜகுலா வெலுத்தாடார், வண்ணார், சலவைத் தொழிலாளர் மற்றும் ராஜகா உட்பட தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் சாதி பட்டியலில் எங்கள் சமூகத்திற்கு மட்டும் ஜாதியை குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ்கள் வழங்குவது வருந்தத்தக்க நிகழ்வாக உள்ளது.

 

மேலும் எங்கள் வரலாற்று சுவடுகள் சில மறைக்கப்பட்டிருந்தாலும் பல உண்மைகள் எங்களின் வரலாற்றுகளை பறைசாற்றும் விதமாக அமைய பெற்றுள்ளது. அதில் குறிப்பாக கீழ்திசை சுவடிகளில் வரிசை எண் -76 இடங்கையர், வலங்கைர் வரலாறு எனும் புத்தகம் பொது பதிப்பு ஆசிரியர் நடன காசிநாதன் இயக்குனர் தொல்பொருள் ஆய்வுத்துறை சென்னை அவர்களால் 1995- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

 

ஜெர்மன் நூலில் இடங்கையர் ஜாதிகளாக ஒன்பதும் வலங்கையர் ஜாதிகளாக 18 குறிப்பிடப்படுகின்றன .அதில் வேடர், நெசவாளர், செட்டிகள், (வியாபாரிகள்) முதலானவர் இடங்கையர் எனவும் குயவர், வண்ணார், பள்ளக்குத்தூக்குவோர் , முமதியாரில் ஒரு பிரிவினர் வலங்கையர் என குறிப்பிடப்பட்டுள்ளதை அறியலாம்.

 

இதில் வலங்கையர் என்றால் வலிமை மிகுந்து போர்படையில் போர்புரிபவர்கள் எனக்கூறப் படுகிறது. அதுமட்டுமின்றி எங்கள் சமூக மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மாற்றம் ,அரசியல் ஆகியவற்றில் முன்னேற்றம் அடையாமல் பின் தங்கியே உள்ளனர்.மேலும் தமிழகத்தில் 60 லட்சத்திற்கு மேலான எங்கள் மக்கள் இத்தகைய இடர்பாடுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

 

எனவே தமிழக அரசு அதை கருத்தில் கொண்டு தமிழக அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் வரிசையில்- 38 மற்றும் ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வருசையின் 156 ஆகியவற்றை கண்டு சரி செய்து ராஜகுலத்தோர் என பெயர் மாற்றம் செய்து இருளில்முல்கி இருக்கும் எங்கள் சமூகத்திற்கு விடியலை தருமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து கூறப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்வில் துணை தலைவர்
பேராசிரியர் குன்றக்குடி பெருமாள்,
பொதுச் செயலாளர் பழனிச்சாமி,
முதன்மை செயலாளர் சிவா,
செயலாளர் தடா ஆறுமுகம்,
பொருளாளர் அருண்ராஜ் ,
ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர்
திருச்சி இளங்கோவன்,

 

தணிக்கை குழு செயலாளர்
ரவிராஜன் வங்கி மேலாளர்,
தேர்தல் பணிக்குழு செயலாளர்
K.சத்தையா ,
மாநில அமைப்பு செயலாளர்கள்
இராஜேஸ்வரி கணேசன், செல்வநாயகம்,
மாநில இணை அமைப்பு செயலாளர்கள்
தஞ்சை பன்னீர் செல்வம்,
திருச்சி சண்முகம்
சிவகங்கை பாண்டியராஜன், மதுரை சித்ரா, கோவை அக்ரி இளங்கோவன்,

 

மாநில துணை பொது செயலாளர்கள்
முருகையன்
L. கலை செல்வி,
மாநில துணை செயலாளர் முருகன்,
மாநில இணை செய்தி தொடர்பாளர்
அழகர் சாமி,
துணை ஒருங்கிணைப்பாளர்
குணசேகரன் ,
சட்ட ஆலோசகர் கணேசன் ,
மாநில இளைஞர் அணி செயலாளர்
ஆனந்தன்,..

 

மாநில மகளீர் அணி செயலாளர்
உஷா முருகானந்தம்,
மாநில வழக்கறிஞர் அணி செயலாளர்
அண்ணாத்துரை ,

 

துணை பொதுச் செயலாளர்
மதுரை கலைச்செல்வி , மற்றும் 40மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட, மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )