தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1030 கிலோ பறிமுதல், அபராத தொகை ரூ.50,000/- மற்றும் ஒரு குடோன் சீல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தல் படியும் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களின் அறிவுறுத்தல் படியும்,
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவு படியும் இன்று (07.08.2025) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான கப், பைகள், பிளேட்கள், கவர்கள் சோதனை நாகர்கோவில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மரு.ஆல்பர் M.மதியரசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த சோதனையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கேப் ரோடு, ஈத்தாமொழி ரோடு, கோட்டார் ஆகிய பகுதிகளில் சுமார் 25 கடைகளில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டம் ஸ்டோர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 390கிலோ மற்றும் குடோனில் 640கிலோ (அபராத தொகை ரூ.50,000/-) பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இந்த சோதனையின் போது மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மரு.ஆல்பர் M.மதியரசு அவர்களோடு துப்புரவு அலுவலர்கள் திரு.ராஜாராம், திரு.பகவதி பெருமாள் மற்றும் திரு.ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் சுகாதார மேற்பார்வையாளர்கள் குமார், ஜெயின் டேவிஸ், விக்னேஷ், ஆண்டனி, அனிஸ் கிப்ட், ஜெரின், அபின், ஜெயன், அனிஸ், ரஜாத், மணிகண்டன், C.சுப்பிரமணியபிள்ளை, பாலவினித், தவசி, S.சுப்பிரமணியபிள்ளை, அழகேசன், சரவணன், சந்திரன், ஜினோ, கென்னடி, லிங்கேஷ், அபினேஷ், அருண், பொன் அஜித், விஷ்ணு மற்றும் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், துய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பழனி மற்றும் பரப்புரைப்புரையாளர்கள் சிங்காரவேலு, வினில், சிவா மற்றும் ஓட்டுநர்கள் பீட்டர், கிளிட்டஸ், சுதாகர் ஆகிய 50 பேர் கொண்ட மாநகராட்சியின் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் தடுப்பு குழு உடன் இருந்தனர்.
இந்த சோதனையில் மொத்தம் ஒரே நாளில் 1030 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு ரூ.50,000/- அபராதமும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.