BREAKING NEWS

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் தேனி பங்களா மேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் தேனி பங்களா மேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்ட எடப்பாடி தரப்பின் அமைப்புச் செயலாளர் ஜக்கையின் தலைமையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் பங்களா மேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

 

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி இன்று தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

 

 

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் டி கே ஜக்கையன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மாணவ மாணவியர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்ததை கண்டித்தும்,

 

 

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை அதிமுகவினர் எழுப்பினர்.

 

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் தற்போது எடப்பாடி தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )