தமிழக நிதியமைச்சர் சீரியஸ் பேச்சு…. மது குடிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாம்!

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய அதிமுக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி ;
மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு 32 ஆயிரம் கோடியும், இந்த ஆண்டு 45 ஆயிரம் கோடியும் தமிழ்நாடு அரசு வருவாய் பெற்றுள்ளது. இந்த ஆண்டு 25% மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதான் திமுக அரசின் சாதனையா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.
கடந்த கொரோனா காலத்தில் மது நுகர்வோர் வீழ்ச்சி இருந்தது. தற்போதும் மது நுகர்வோர் குறைவாக தான் உள்ளதே தவிர அதிகமாகவில்லை என்றார் தொகுப்பு,
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
