BREAKING NEWS

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு பொற்காலம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இடிமுரசு இஸ்மாயில் பாராட்டு.!

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு பொற்காலம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இடிமுரசு இஸ்மாயில் பாராட்டு.!

 

திருச்சி: தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் இடிமுரசு இஸ்மாயில் பாராட்டு தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நாடு போற்றும் நல்லாட்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் 2023-24 ஆண்டுக்கான பட்ஜட்டில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்திட ரூ .500 கோடி அளித்து உடனடியாக 290 கோடி ஒதுக்கீடு செய்ததை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் பாராட்டுகிறேன்.

 

மேலும் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மானிய கோரிக்கையில் பேசும்போது, ​​2 ஆயிரத்து 996 அரசு நடுநிலைப் பள்ளிகள் பள்ளிகள், 540 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் ரூ.175 கோடியிலும், 7 ஆயிரத்து 500 அரசு பள்ளிகளில் 150 கோடி மதிப்பீட்டில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு உருவாக்கப்பட்டு, 25 மாவட்டங்களில் செயல்பட்டுவரும் மாதிரி மேலும் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும்.

 

9 முதல் 12 ம் வகுப்பு வரை மனநலம் மற்றும் வாழ்வியல்திறன் பயிற்சிகள் வழங்கப்படும். 1 முதல் 12 ம் வகுப்பு வரை பார்வைதிறன் குறைபாடுள்ள மாணவர்களின் பயன்பாட்டிற்க்கு மின்னுருபுத்தகங்கள் உருவாக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள சிறைகளில் எழுதப்படிக்க தெரியாத ஆயிரத்து 249 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட உள்ளிட்ட சிறப்புமிக்க வெளியிட்டுள்ளார்.

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமாக திகழ்கிறது. மேலும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு மானிய கோரிக்கையில் புதிய பஸ்நிலையம் அமைத்தல், சாலை வசதிகளை மேம்படுத்துதல், மக்களுக்கு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சுமார் 2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் திட்டங்களை அறிவித்துள்ளதை வரவேற்று பாராட்டுகிறேன்.

 

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 அமைச்சர்களும் தமிழக முதல்வரின் தலைமையில் சிறப்பாக மக்கள் பணி செய்வதை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இடிமுரசு இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS