தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரயில்மூலம் தென்காசி பயணம்..
செய்தியாளர் செங்கை ஷங்கர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் மார்க்கமாக தூத்துக்குடி மாவட்டம் தென்காசிக்கு மக்களுக்கு தலத்திட்டம் வழங்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்தார்.
அவருக்கு சென்னை எழும்பூர், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் செங்கல்பட்டு திமுக நகர செயலாளர் நரேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் இரயில் நிலையத்தில் காத்திருந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவருக்கு பழவகைகள், பூஸ்ட், ஹார்லிக்ஸ் ஆகியவற்றை வழங்கி முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.
முதல்வர் இரயிலில் செல்வதை முன்னிட்டு ரயில்நிலையம் நுழைவாயில் முதல் அனைத்து நடைமேடைகள் என இரயில்நிலையம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர்.
பயணிகள் மற்றும் அவரது உடமைகள் என அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் முழு பரிசோதனை செய்த பிறகே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
முதல்வரும் இரயில் பெட்டியில் நின்றபடி கட்சி நிர்வாகிகள் மற்றும் நடைமைடையில் காத்திருக்கும் பயணிகள் அனைவருக்கும் கையசைத்து விடைபெற்று சென்றார்.