BREAKING NEWS

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட சிறப்பு மாநாடு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட சிறப்பு மாநாடு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சிறப்பு மாநாடு பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் ஆஞ்சநேயலு தலைமையில் நடைபெற்றது.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார மாநாட்டில் நெல் ஒரு குவிண்டாலுக்கு 3000 வழங்கிடவும் கரும்பு ஒரு டன்னுக்கு 5000, வழங்கிடவும் பயிர் காப்பீடு,மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் ஆறு வழி சாலை அமைத்திடவும்,

 

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்கவும் மழையால்சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரண வழங்கிடவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் விவசாய சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS