BREAKING NEWS

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தவும், மத்திய அரசு அறிவித்துள்ளவாறு அறிவி ப்பு பணியிடங்களை நிரப்ப வேண்டியும்,

 

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்குவது போல குறைந்தபட்ச ஓய்வுதியும் வழங்க வேண்டும், திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி வட்ட தலைவர் முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் மகாலிங்கம், துணைத்தலைவர் சண்முகம், வட்ட செயலாளர் தமிழரசன், பொருளாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் பலர் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் வினோத்குமார்.

CATEGORIES
TAGS