தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி தினம் மற்றும் சீர்வரிசை விழா.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை ஒன்றியம் குடஞ்சாடி ஊராட்சி உருளியில் தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சிவகங்கை சைல்டுலைன் இணைந்து அங்கன்வாடி தினம் மற்றும் சீர்வரிசை விழா ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
சைல்டுலைன் உறுப்பினர் முகேஷ் கண்ணன் வரவேற்புரையாற்றினார்.அங்கன்வாடி தினத்தின் நோக்கங்கள் குறித்தும் சீர்வரிசை ஊர்வலத்தை துவக்கி வைத்து ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஜீவானந்தம்,சைல்டு லைன் செயல்பாடுகள் குறித்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ரசீந்திரகுமார்,முன்பருவ கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் லெட்சுமி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
இதில் அங்கன்வாடி மையத்தை சமூக பங்கேற்புடன் குழந்தை நேய மையமாக கட்டமைத்தல்,முன்பருவக்கல்வி, ஊட்டச்சத்து,உணவு மற்றும் நலவாழ்வுச்சேவைகளை தரமானதாக மாற்றுதல், அங்கன்வாடி மையங்களின் நீடித்த வளர்ச்சிக்கும்,தற்சார்பிற்கும் உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவை திரட்டுவதுடன் புரவலர்கள் மற்றும் கொடையாளர்களை ஈர்த்தல் ஆகியவற்றை இலக்காகவும்,நோக்கமாகவும் கொண்டு அங்கன்வாடி தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில், ஐ.ஆர்.சி.டி.எஸ்.குழந்தைகள் இல்ல நிர்வாகி இமயமடோனா, ஐ .சி.டி.எஸ் ,குடும்ப நல ஆலோசகர் ஜோதி,சைல்டு லைன் உறுப்பினர்கள், கார்த்திகா கார்த்திகேயன், அர்ச்சனா, சரவணன்,பிர்லா, மனோகரி, சிவசங்கரி,சில்ரன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு மற்றும் ஆசிரியர்கள் ,கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.அங்கன்வாடி மையத்திற்கு தேவையான சீர்பொருட்கள் வழங்கப்பட்டது. அங்கன்வாடி மையப்பொறுப்பாளர் தனலெட்சுமி நன்றியுரையாற்றினார்.