தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் எட்டு நாள் என்சிசி பயிற்சி முகாம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன்
கடந்த 24 12 2022 அன்று தொடங்கிய இம் முகாமில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, பூம்புகார் கல்லூரி, ஏவிசி கல்லூரி கல்லூரி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, அரசினர் ஆடவர் கல்லூரி, மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த சுமார் 450 என்சிசி மாணவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.
கும்பகோணம் எட்டாவது பட்டாலியன் கமாண்டர் கர்னல் திரு s சந்திரசேகர் தொடக்க உரையாற்றி முகாமினை தொடங்கி வைத்தார் இம் முகாமில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி எதிரிகளை எதிர்கொள்ளும் பயிற்சி வரைபடத்தை வைத்து இருப்பிடத்தை கண்டுகொள்ளும் பயிற்சி விளையாட்டு மற்றும் நுண் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று என் சி சி யின் திருச்சி மண்டல குரூப் கமாண்டர் கர்னல் சுனில் பட் முகாமினை பார்வையிட்டார். பயிற்சி முகாமில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் என்சிசி அலுவலர் துரை கார்த்திகேயன் பூம்புகார் கல்லூரி என்சிசி அலுவலர் லட்சுமணன் அதிராம்பட்டினம் கல்லூரி என்சிசி அலுவலர் முகமது அப்பாஸ்,.
மஞ்சக்குடி கல்லூரி என்சிசி அலுவலர் ராஜு நாகப்பட்டினம் என் டி பி எச் பள்ளியின் என்சிசி அலுவலர் திரு குமார் பேரளம் பள்ளியின் என்சிசி அலுவலர் திரு குருமூர்த்தி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பள்ளியின் என்சிசி அலுவலர் திரு அடைக்கலராஜ் உள்ளிட்ட என்சிசி அலுவலர்கள் ராணுவ சுபேதார் மேஜர் பிரைட் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகின்றனர்.
முகாம் ஏற்பாடுகளை கும்பகோணம் அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் மற்றும் முதல்வர் பேராசிரியர்கள் செய்திருந்தனர்