தரங்கம்பாடியில் அனாதை பிணத்தை இந்து முறைப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவனைப்பு இல்லத்தில்,..
பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். மேலும் அங்கு யார் இறந்தாலும் இறந்தவரின் மத முறைப்படி நல்லடக்க சேவை செய்து வருகிறார்.
கடந்த 15 /12/2022 அன்று சம்சுதீன் என்ற இஸ்லாமியர் ஒருவர் இறந்தார். அவரை அவரது மத மத முறைப்படி நல்லடக்கம் செய்தார். அதேபோல் கடந்த 29/01/2023 அன்று ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அவரை இந்து முறைப்படி பாவாசா அகமது குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்களுடன் அடக்கம் செய்தார்.
மேலும் பாவாசா அகமதுக்கு அவரது குடும்பத்தார்கள் உறுதுனையாக இருந்து இச்சேவை செய்து வருவதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS அனாதை பிணத்தை இந்து முறைப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்.காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமதுதமிழ்நாடுதரங்கம்பாடிதலைப்பு செய்திகள்மயிலாடுதுறை மாவட்டம்முக்கிய செய்திகள்