BREAKING NEWS

தரங்கம்பாடியில் திருச்சி தனியார் கல்லூரி சார்பில் சுகாதார மருத்துவ முகாம்.

தரங்கம்பாடியில் திருச்சி தனியார் கல்லூரி சார்பில் சுகாதார மருத்துவ முகாம்.

 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை மற்றும் சி.எஸ்.ஐ.திருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர் திருமண்டலம் இணைந்து பொதுமக்களின் நாளுக்கான சுற்றுச்சூழல், பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் கால்நடை பொது சுகாதார விழிப்புணர்வு முகாம் கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

 

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கலங்கரை என்ற தலைப்பில் கிராமிய பாலின சமத்துவம், குழந்தைகள், இளையோர் நல்வாழ்வு, கால்நடை, சுற்றுச்சூழல் பராமரிப்பு, உடல்நலம், சுகாதாரம், குடிபோதை, கைப்பேசி அடிமைத்தன மீட்பு உள்ளிட்ட சமூக சார்ந்த விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் நலன் சார்ந்த முகாம் நடைபெற்று வருகிறது. 

 

அந்த வகையில் செவ்வாய்க்கிழமை தரங்கம்பாடி பேரூராட்சி 6-வது வார்டு கேசவன் பாளையத்தில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் ஜோயல் ஜான், கிருபா ஏஞ்சலின் தலைமையில் நடைபெற்ற,

 

 

நிகழ்ச்சியில் கல்லூரியின் இணை பேராசிரியர் முனைவர் எட்வின் பிராங்கிளின் சாமுவேல், உதவி பேராசிரியர்கள் பியூலா நேசபிரியா, சாம்சன், உதிய செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

நான்கு தினம் நடைபெற்றிருக்கின்ற முகாம்களில் கலங்கரை கிராமிய முகம் என்ற அமைப்பை சார்ந்த 63 மாணவ -மாணவிகள் அடங்கிய குழுக்கள் செவ்வாய்க்கிழமை தரங்கம்பாடி அடுத்து கேசவன்பாளையம் பகுதியில் சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை புனித லேடி ஆஃப் லூர்து மருத்துவமனை மருத்துவர் அருட்சகோதரி டீனா தலைமையில், மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் பங்கேற்று பொதுமக்களுக்கு காது, மூக்கு, தொண்டை, ரத்த அழுத்தம் மற்றும் பொது மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

 

மற்றும் மதியம் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தன் சுத்தம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட தாய் மற்றும் குழந்தைகள் நல அலுவலரும் சுகாதாரத் சேவை துணை இயக்குனருமான அம்பிகா கருத்துரை வழங்கினார்.

 

பயனாளிகளுக்கான மகளிர் மற்றும் வளர் இளம் பெண்கள் கல்வியின் முக்கியத்துவம், வளர் இளம் ஆண்கள், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

அதைத்தொடர்ந்து மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் குமரகுருபன் தலைமை உரையாற்றினார். செம்பனார்கோவில் வட்டார மருத்துவர் கார்த்திக் சந்திரகுமார் சிறப்புரையாற்றினார்.

 

தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல், மயிலாடுதுறை மதர் லேண்ட் சாரி டேபிள் டிரஸ்டின் பொறுப்பாளர் ஈழவளவன், தரங்க பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் 6-வது வார்டு கவுன்சிலர் செந்தாமரைச்செல்வி ரமேஷ், கேசவன் பாளையம் பஞ்சாயத்து தலைவர் சுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

நிகழ்ச்சியில் கேசவன் பாளையம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை பெற்று பயனடைந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )