தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை சுற்றி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி மாவட்ட ஆட்சியர் எம் எல் ஏ துவக்கி வைத்தனர்.
தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி.!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையையொட்டி வரலாற்று சின்னமாக போற்றப்படும் டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்திற்கு தினமும் வெளிநாடு, வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலா மையத்தில் தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி நடைபெற்றது.
இந்த பணியை கேரளா மாநில தலைமை தேர்தல் அலுவலர் சஞ்சய் கவுள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தரங்கம்பாடி கடற்கரை மற்றும் டேனிஷ் கோட்டையில் தற்போது தூய்மை பணி தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், சுற்றுப்பகுதியை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் விரைவில் மறு சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மீண்டும் மஞ்சப்பை வழங்கியுள்ளோம். தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.7 கோடி செலவில் பேவர் பிளாக் சாலை, தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொறையார் பகுதியில் கீழ மேட்டுப்பாளையம் சோழன் நகர், கழுவன்திட்டு, சிந்தாரிப்பேட்டை, புஷ்ப பாலகுரு நகர், சாத்தங்குடி ஆகிய பகுதிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.34 கோடி செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொறையார் திடக்கழிவு மேலாண்மையில் தரைதளம், மேற்கூரை ரூ.37 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரங்கம்பாடியில் ராதாகிருஷ்ணன் வீதி, அன்னை வீதி, இந்திரா நகர், மகாத்மாகாந்தி வீதி ஆகிய பகுதிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.34 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறினார்.
அப்போது தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் பொன் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி.கமலக்கண்ணன், தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, திமுக ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், எம்.அப்துல்மாலிக் தரங்கை பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.