BREAKING NEWS

தரங்கம்பாடி பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா.

தரங்கம்பாடி பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு ஓவியப்போட்டியில், மாநில அளவில் 3 ஆம் இடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.

 

தரங்கம்பாடி புனித தெரசாள் பள்ளியில் படிக்கும், மாணவிகள் சீத்தாலட்சுமி, மோகனப்பிரபா ஆகியோருக்கு முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் வாட்ஸ் ஆப் மற்றும் முகநூல் நண்பர்கள் வாயிலாக கல்வி உதவி தொகை வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

 

அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மாநில இணைசெயலாளர் திங்கள்கண்ணன், ஆசிரியை மீனாட்சிவேல்முருகன், தரங்கை ரோட்டரி சங்கத்தலைவர் சக்திமணிகண்டன், குலோத்துங்கன், நந்தக்குமார் சிங்கப்பூர் கிருஷ்ணன், பிரபு, தமிழ்வாணி, உடற்கல்வி ஆசிரியர் சாமிநாதன் ஆகியோர் வழங்கிய நிதியை சமூக ஆர்வலர்கள் முன்னிலையில், மாணவிகளுக்கு வழங்கினர்.

 

மேலும் தேர்தல் ஆணையம் நடத்திய, தேர்தல் விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற மாணவி பூஜா விற்கு, ஊக்கத்தொகையும், தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழ்களையும், பதக்கங்கத்தையும், வழங்கி மாணவியை பாராட்டினர்.

 

 

கல்வி உதவித்தொகை பெற்றக்கொண்ட மாணவிகள் சீத்தாலட்சுமி, மோகனப்பிரபா மற்றும் மாநில அளவிவில், ஓவியப்போட்டியில் மூன்றாம் இடம்பிடித்த மாணவி பூஜாவையும், ஆசிரியர் மீனாட்சி, வர்த்தசங்க பொருளாளர் இளந்தமிழன், ஷாகினி மரைன் உரிமையாளரும்,

 

சமூக ஆர்வலருமான ரமேஷ், ஆசிரியர் மாதவன், தமிழக ஹயர்கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் செயலாளர், சந்தனசாமி, உடற்கல்வி ஆசிரியர் சாமிநாதன், சமூக ஆர்வலர் ரஜினிமுருகன், ரோட்டரி சங்க பொருளாளர் பிரான்சிஸ், சுலைமான், ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துக்களும், ஆலோசனைகளையும் வழங்கினர்.

 

 

தரங்கை வர்த்தக சங்கத்தலைவர் நடராஜன், செயலாளர் பிரவீன் மாணவிகளுக்கு கல்வித்தொகையும், தரங்கை தோகா சங்கத் தலைவர் ராசிக், சுலைமான் சான்றிதழ்களையும், சமூக ஆர்வலர் ரமேஷ் பதக்கமும் அணிவித்தனர்.

 

கல்வித் உதவித்தொகையை பெற்றுக்கொண்ட மாணவிகளும்,
மாணவி பெற்றோரும், சமூக ஆர்வலரும் தமிழக ஹயர்கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் பொருளாளரும், பொதுதொழிலாளர் சங்க பொருப்பாளருமான முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமாருக்கும்,
உதவிய நன்கொடையாளருக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.

 

இந்நிகழ்வில் கே.பி.எம்.செல்வக்குமார், கருப்புசாமி,
ரொட்டேரியன் தீபக் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS