BREAKING NEWS

தரங்கம்பாடி பேரூராட்சி 15 வது வார்டில் புதிய ஈமகிரியை மண்டபம் எம் எல் ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டினார்.

தரங்கம்பாடி பேரூராட்சி 15 வது வார்டில் புதிய ஈமகிரியை மண்டபம் எம் எல் ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி 15-வது வார்டில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஈமகிரியை மண்டபம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தரங்கை பேரூர் மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக்,
மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் கொக்கரக்கோ சௌமியன், தரங்கை பேரூர் செயல் அலுவலர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி சடகோபன், பேரூர் மன்ற உறுப்பினர்கள் குமரவேல், ரமேஷ், தரங்கை பேரூர் இளைஞர் அணி செயலாளர் சரவணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )