BREAKING NEWS

தரங்கம்பாடி பேரூராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்தும் பணி.

தரங்கம்பாடி பேரூராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்தும் பணி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்,…

 

என்று கடந்த மாதம் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தொடரில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தனர். 

 

 

பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று பேரூராட்சி மன்ற தலைவர் அறிவுறுத்தலின்படி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் பொறையார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில்,

 

 

டேனிஸ் கோட்டை பகுதி மற்றும் பொறையார் முக்கிய கடைவீதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. 

 

பன்றிகளை பிடிப்பதற்காக 15 ஆட்கள் மதுரையில் இருந்து வரவழைத்து 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

 

இதில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், பேரூராட்சி உதவியாளர் மோகன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )