தருமபுரி மாவட்டம் சோமண அள்ளியில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள சோமன அள்ளி தனியார் மண்டபத்தில் பென்னாகர சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஒன்றியம் சார்பாக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் பாமக மாநில கெளரவ தலைவர் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் MLA, மாவட்ட துணை செயலாளர் பி.ஜி.சம்பத் ஆகியோர்
முன்னிலையில் வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம், மாநில அமைப்பு செயலாளர்கள் சாந்தமூர்த்தி, சண்முகம் மாவட்ட தலைவர் செல்வகுமார்ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஓகேனக்கல் உபரி நீரை நீரேற்று குழாய் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்ப வேண்டும், அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக ஓகேனக்கல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்த்தாரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் விதிமுறை மீறி அமைக்கப்படும் சுங்க கட்டண நிலையத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். தர்மபுரி – ஓசூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் சோமன அள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும்,
என்னேகொல் புதுர் நீர் பாசன கால்வாய் திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுதாகிருஷ்ணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ்,
ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, சசிகுமார்,
ஒன்றிய தலைவர்கள் முருகன், காமராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், ஒன்றிய அமைப்புச் செயலாளர்கள் விநாயகம், ரமேஷ், செட்டியப்பன் மற்றும் மூத்த நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.