BREAKING NEWS

தர்மத்துப்பட்டியில் நாடக மேடை   எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தர்மத்துப்பட்டியில் நாடக மேடை   எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஆண்டிபட்டி அருகே உள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை எம்எல்ஏ மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

 

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளிமான்கோம்பை ஊராட்சியில் உள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் நாடக மேடை அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

 

இந்த கோரிக்கையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நாடக மேடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் ரூ.9.80 லட்சத்தில் தர்மத்துப்பட்டி கிராமத்தில் நாடக மேடை கட்டப்பட்டது.

 

இந்த நிலையில் இந்த நாடக மேடை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு நாடக மேடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் தவசி, துணை தலைவர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )