தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்காமல் இருப்பதற்காகவும் விடுமுறை அளிக்காமல் இருப்பதற்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அவர்கள் உழைக்கும் வேலைக்கு சரியான முறையில் சம்பளம் கொடுக்காமல் இருப்பதற்காகவும்,
மற்றும் அவர்களுக்கு அரசாங்க விடுமுறை நாட்களில் விடுமுறையும் அளிக்காமல் இருப்பதற்காகவும் தூய்மை பணியாளர்கள் நீதி கேட்டு விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் முக்கிய கோரிக்கையானது 30 நாட்கள் பணிபுரிந்தாலும் 24 நாள் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு நாளும் விடுமுறை அளிக்காமல் அவர்களை சித்திரவதை செய்வதிலேயே குறிக்கோளாக உள்ள அதிகாரிகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?
என்பதே தூய்மை பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. உழைப்பவர்களின் அவலமான நிலையை கண்டும் அதிகாரிகள் ஏன் மெத்தனம் காட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றன.