தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்திஆர்ப்பாட்டம்

தென்காசியில் தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :திரளான மக்கள் பங்கேற்பு!
பாளையங்கோட்டை மறைமாவட்டம் எஸ்.சி /எஸ்டி பணிக்குழு தென் மண்டல தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் மற்றும் இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கம், தமிழக மக்கள் நல கட்சி இணைந்து தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தியும்,
விடுதலைபெற்ற இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் அளித்த அதிகாரத்தை மீறி குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்து மதத்தை சாராத தாழ்த்தப்பட்டோர் எவரும் பட்டியலை இனத்தார் என கருதப்பட மாட்டார்கள் என்று சட்டத்திற்கு புறம்பான ஆணையை 10 .8 .1950 ல் பத்தி 3 ல் இணைத்தார்.
இந்த உரிமைகள் மறுக்கப்பட்ட இந்நாளையே தலித் கிறிஸ்தவர்கள் ஆகஸ்ட் 10 யை கருப்பு நாளாக கடைபிடித்து வருவதோடு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட பேரருட்திரு .ஞானப் பிரகாசம் அடிகளார் தலைமை வகித்தார்.பாளையங்கோட்டை மறை மாவட்ட எஸ்.சி /எஸ்டி பணிக்குழு செயலர் அருட்பணி ஜீவா அடிகளார் முன்னிலை வகித்தார்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் துக்க நாள் எழுச்சி உரையினை தலித் கிறிஸ்தவர் நல இயக்கத்தின் நிறுவனர் பேராயர் தனராஜ் (CEFI Diocese) தலித் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் நிலை, தற்போதைய மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு என்பது குறித்து நீண்ட நெடிய விளக்கவுரை ஆற்றினார்.
இந்நிகவில் கவன ஈர்பு கோரிக்கை விளக்க உரையினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்காசி மாவட்ட தலைவர் அசோக்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்காசி மாவட்ட பொருளாளர் பால்ராஜ், தமிழக மக்கள் நலக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் போதகர் சீயோன், மக்கள் தேசம் கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் தம்பி சேவியர், கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாநில செயலாளர் சுபாஷ், தென்மண்டல தலித் கிறிஸ்தவர் இயக்க தலைவர் இலோசியஸ் ஆகியோர் ஆற்றினர். நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கு எதிராக கண்ட கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்வினை தென் மண்டல தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம் மற்றும் பட்டியலினத்தார் பழங்குடியினர் பணிக்குழுவுடன் இணைந்து தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ராஜேந்திரன், தென்காசி மறைவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ், கோவில்பட்டி மறைவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வராஜ், சங்கரன்கோவில் மறைவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டெர்லின் ராஜ், அலுவலக பணியாளர் சலேத் மேரி ஆகிய பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பு செய்தார். தென்காசி மாவட்டத்தில் முதன் முறையாக எழுர்ச்சியுடன் நடைபெற்ற இந்த கவன ஈர்பு ஆர்பாட்டத்தில்,
சுந்தர பாண்டியபுரம், இலத்தூர், கொட்டா குளம், வல்லம், புளியறை, சங்கரன்கோவில், குவளை கண்ணி, திருவேங்கடம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சபை பாகுபாடின்றி அனைத்து கிறிஸ்தவ மக்களும் திரளாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியினை தென்காசி மறைவட்ட ஒருக்கிணைப்பாளர் அந்தோணிராஜ் தொகுத்து வழங்கினார். நிறைவாக ஆசிரியர் ஜான் துரைசாமி நன்றி கூறினார்.