BREAKING NEWS

தலைவர்களின் ஓவியத்தால் பள்ளியை அழகு படுத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்.

தலைவர்களின் ஓவியத்தால் பள்ளியை அழகு படுத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்.

 

அரசு பள்ளியை ஓவியங்களால் அழகு படுத்திய ஆசிரியர்!!!

 

ஒரத்தநாடு அருகே உள்ள அரசு பள்ளியில் 26 கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களின் படங்களை அசல் மாறாமல் வரைந்து அச்த்தியுள்ளார் ஓவிய ஆசிரியர்

 

 

தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 17 ஆண்டுகளாக இப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக ஜெயக்குமார் பணிபுரிந்து வருகிறார். 

 

பள்ளிக்கு வந்த நாளிலிருந்து இன்று பல வரை ஓவியங்களை வரைந்து பள்ளியை அழகாக மெருகேற்றி யுள்ளார்.

 

 

இந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்காக புதிதாக ஏதாவது ஓவியங்களை வரைய வேண்டும் என்ற எண்ணத்தில் சரஸ்வதி ஓவியம் முதல் 25 -க்கும் மேற்பட்ட தமிழ் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களின் ஓவியங்கள் வரை பள்ளியின் மேல் சுவற்றில் அசல் மாறாமல் வரைந்து பார்ப்பவர் மனதில் ஓவியங்களுக்கு உயிர் ஊற்ற வைத்துள்ளார்.

 

இந்த ஓவியங்களை உதவியாளர் இல்லாமல் தனி ஆளாக வரைந்துள்ளார், மாணவர்களுக்கு வகுப்புகள் இல்லாத நேரத்தில் வந்து அவ்வபோது இவ்வோயிங்களை தீட்டியுள்ளார்‌.

 

மேலும் ஓவிய ஆசிரியர் ஜெயக்குமார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தனது தனித்துவமான திறமையால் பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்ததோடு மட்டுமல்லாமல் மதுரை தமிழ் சங்கத்திற்கும் ஓவியங்களை வரைந்து பல விதமான சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இன்னும் ஏன் திருக்குறளிர்கும் கூட ஓவியங்களை வரைந்து அச்த்தியுள்ளார் இந்த அரசு பள்ளி ஆசிரியர்.

 

 

பள்ளியிலும் பல விதமான இயற்கை காட்சிகள், பள்ளிக்கு உகத்தாண ஓவியங்களையும் தீட்டியுள்ளார். மாணவர்களுக்கும் ஓவியங்களில் பல விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு பரிசுகளையும் பெற வைத்துள்ளார்…

 

இது குறித்த நேர்காணலில் ஆசிரியர் ஜெயக்குமார் கூறுகையில்:

 

அரசு வேளை கிடைப்பதற்கு முன்பு கோயில் மற்றும் சுவரொட்டிகள் போன்ற பல்வேறு இடங்களில் ஓவியங்களை வரைந்துள்ளேன்.

 

இன்னும் அதிக அளவிலான ஓவியங்களை பள்ளிக்கு வரைந்து மேலும் மெருகேற்ற உள்ளதாகவும் தெரிவித்த ஆசிரியர் தனிப்பட்ட முறையில் யாராவது படங்களை ஓவியமாக வரைய வேண்டும் என விரும்பினாள் நிச்சயமா வரைய தயார் என்றும் கூறினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )