தாமிரபரணி நதியை தூய்மை படுத்துதல் பணியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில்
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோவில் ஆற்றங்கரை மற்றும் பாபநாசம் கோவில் வைத்து தாமிரபரணி நதியை தூய்மைபடுத்துதல் நடைபெற்றது.
அதில் சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோவில் ஆற்றங்கரை வைத்து நடைபெற்ற தூய்மை பணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் மாவட்ட பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வன் அவர்கள் வழிகாட்டுதலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறியது பாவத்தை போக்க நதியில் பழைய ஆடைகளை விடுவது மிக பெரிய பாவம் எனவும் நமது நதியை நாம் தான் குப்பைகளை போடாமல் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
இதில் சேரன்மகாதேவி வட்டாட்சியர் திருமதி விஜயா அவர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் காதர் மற்றும் அலுவலர்கள், சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் சேக் அப்துல் காதர் , உதவி ஆய்வாளர் ஆல்வின் மற்றும் காவலர்கள், எட்ரி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் அவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சேரன்மகாதேவி கவின் கலை குழு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், ஜேம்ஸ் மறைன் கல்லூரி, திசையன்விளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் , APA கல்லூரி ,வள்ளியூர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தட்சரணமாற நாடார் கல்லூரி,கள்ளிகுளம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மனோ கல்லூரி கரிசல்பட்டி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்,
நேதாஜி நரிகுறவர் பள்ளி,வள்ளியூர் ஆசிரியர் பெருமாள் மற்றும் குழந்தைகள் மற்றும் எக் பவுன்டேசன் நிவேக் அவர்கள், தாய் வீடு தொண்டு நிறுவனம் ஆறுமுகம், மகேஷ்வரன் அவர்கள் மற்றும் ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பர்கள் , நெல்லை நீர்வள தன்னார்வலர்கள் நெய்னா முகமது, முத்து கிருஷ்ணன், சிவமாரிமுத்து, ஆதம், மங்களா, சிவசரிதாதேவி மணிகண்டன்,
மதார் மாதவன், மாரியப்பன் ஆக 300 தன்னார்வலர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இதில் 1.5டன் கழிவு துணிகள் மற்றும் நெகிழிகள் நதியில் இருந்து எடுக்கப்பட்டது.