BREAKING NEWS

தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது குழந்தையின் உடலுக்கு தீங்கு.

தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது குழந்தையின் உடலுக்கு தீங்கு.

 தஞ்சை : உலகம் முழுவதும் தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதுக்கு 3 முக்கிய கொள்கைகள் உண்டு.
1. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்துதல்
2. தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்துவது.
3.குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும்.

 

ஆகஸ்டு மாதம் முதல்வாரம் தாய்ப்பால் வாரமாக அறிவித்து, வருகின்ற 7 ஆம் தேதிவரை விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று தஞ்சை கரந்தை பகுதியில் உள்ள தஞ்சை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் லயன்ஸ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகில் எந்த ஒரு கலப்படம் செய்ய முடியாத ஒரே உணவு தாய்ப்பால் தான்.

தாய்ப்பால் விலைமதிப்பற்றது. எந்த ஒரு உணவையும் செயற்கையாக உருவாக்கும் இந்த காலத்தில், தாய்ப்பாலை மட்டும் உருவாக்க முடியாது.
ஒவ்வொரு தாய்மார்களும் தனது குழந்தைக்கு, குழந்தை பிறந்து 2 வருடங்களுகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குறைந்தது 1 வருடமாவது தாய் பால் கொடுக்க வேண்டும். தாய் பால் கொடுப்பதினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

 

 

தாய்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்:

* தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

* தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளச்சிக்கு தேவையான கொழுப்பு, சக்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்றவை சக்திகள் சரியான அளவில் கிடைக்கிறது.

* வேலைக்குச் செல்லும் பெரும்பாலானோர், குழந்தைகளுக்கு புட்டியில் பால் கொடுக்கின்றனர். இது தவறு.

* 6 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது கெடுதலாகும்.
இந்த காலத்தில் உள்ள பெண்கள் பல்வேறு காரணத்தால் தாய்ப்பால் கொடுக்க மறுக்கின்றனர். தங்களின் அழகு போய்விடும் என்ற வெற்று காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க கூடாது என்று எடுத்துக் கூறினேன். இந்நிகழ்ச்சியில் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பிணிப் பெண்களும், மருத்துவர்களும், லயன்ஸ் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )