BREAKING NEWS

தாராபுரம் பகுதியில் போக்கியத்திற்கு விட்ட கடையை காலி செய்ய மறுக்கும் தி மு க நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருவர் தீக்குளிக்க முயற்சி. 

தாராபுரம் பகுதியில் போக்கியத்திற்கு விட்ட கடையை காலி செய்ய மறுக்கும் தி மு க நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருவர் தீக்குளிக்க முயற்சி. 

 

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடை வீதி சேர்ந்தவர் அபிபுல்லா. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பருக்கு தனது வீட்டின் அருகில் உள்ள கடையை 75 ஆயிரம் போக்கியத்திற்கு மாட்டு இறைச்சி கடை நடத்த கொடுத்துள்ளார்.

 

 

இதையடுத்து அபிபுல்லா மற்றும் போக்கியத்திற்கு எடுத்துக் கொண்டவர் இருவர்களும் இறந்துவிட்டனர். தற்போது அபிபுல்லாவின் மகன் அஸ்கர் அலி மற்றும் அவரது தாயார் வசித்து வருகின்றனர்.

 

 

இந்நிலையில் அந்த கடையை போக்கியத்திற்கு எடுத்துக் கொண்டவரின் மகன் திமுக பிரமுகர் சித்திக் பாஷா அதே பகுதியில் வசித்து வருபவர் கடையை நடத்தி வருகிறார். ஆனால் அஸ்கர் அலி கடை தனக்கு வேண்டும் எனவும், கடையை காலி செய்து கொடுக்குமாறும் சித்திக் பாஷாவிடம் கூறியுள்ளார்.

 

ஆனால் சித்திக் பாஷா கடையை காலி செய்ய மறுத்து விட்டார். இதையடுத்து அஷ்கரலி தாராபுரம் காவல் நிலையத்தில் கடந்த 10 மாதத்திற்கு முன்பாக இது குறித்து புகார் அளித்தார்.

 

மனுவை விசாரித்த போலீசார் சித்தீக் பாஷாவிற்கு மூன்று மாதம் காலக்கெடு கொடுத்து கடையை காலி செய்யுமாறு கூறினர். ஆனால் சித்திக் பாஷா கடையை காலி செய்ய மறுத்து அஸ்கர் அலிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.

 

 

இதை அடுத்து அஸ்கர் அலி மற்றும் அவரது தாயார் துணை வட்டாட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர். இந்த மனைவியின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் சித்திக் பாஷா நடத்தி வந்த கடைக்கு நோட்டீஸ் ஓட்டுனர்.

 

இந்நிலையில் இன்றைய தினம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சித்தீக் பாட்ஷா நடத்தி வரும் கடைக்கு சீல் வைக்க காவல்துறையினருடன் வந்தனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தீக் பாஷா மற்றும் அவரது சகோதரர்கள் கடையை சீல் வைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.

 

 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அஸ்கர் அடி சீமனையை தன் மீது ஊற்றிக் கொண்டு கடைக்கு சீல் வைத்து கடையை காலி செய்து கொடுக்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக போலீசார் இடம் முறையிட்டார்.

இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கடையை சீல் வைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )