தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி மகன் சுதாகர் (வயது 43). இவர் 30.06.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்ததற்காகவும், பதுக்கி வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
மேலும் இவர் மீது ஏற்கனவே பல மதுக்குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் எதிரி வெளியே வந்தால் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும்.எனவே இவர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி வைத்த வேண்டுகோளின் அடிப்படையில்,
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் மேல்பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., ஆணையிட்டதன் அடிப்படையில் 19.07.2023-ந் தேதி மேற்படி சுதாகர் தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தின் படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கான ஆணை பிரதிகள் மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.