திடீர் தீ விபத்தால் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை அரங்கக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் எபினேசர் இவரது கூரை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டின் கூரை மற்றும் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.
தகவல் அறிந்து வந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம் முருகன் வீட்டின் உரிமையாளர் எபினேஷரை சந்தித்து நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
இதேபோல் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஹேப்பி அர்ஷத் ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். இதில் மாவட்ட திமுக துணை செயலாளர் மு. ஞானவேலன் ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார், பி எம் அன்பழகன் கவுன்சிலர் மதினா பர்வீன் சேக்அலாவுதீன்,
கிளைச் செயலாளர் ராமதாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.