திட்டக்குடி அருகே அரசு பஸ்சை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம்.!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வைத்தியநாதபுரம் அவ்வழியே செல்லும் 6ம் நம்பர் அரசு பஸ், கிராமத்தில் நிறுத்தாமல் செல்வதாகவும் இதனால் மாணவர்கள் ஓடி சென்று ஏறுவதால் அதில் சில தினங்களுக்கு முன்பு பஸ்ஸிலிருந்து பள்ளி மாணவர் தவறி கீழே விழுந்து உள்ளனர்.
இதுபோல் பஸ்சில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் கீழே விழுவதை கண்டித்தும் மேலும் கிராமத்தில் உள்ள சாலைகள் பள்ள மேடாக இருப்பதாகவும் சாலையை சீர் செய்ய கோரியும் கிராமத்தில் சாக்கடை செல்ல வடிகால் வசதிகளை சீர் செய்ய கோரியும் முறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் இன்று அவ்வழியே வந்த அரசு பஸ்சை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திட்டக்குடி டி.எஸ்பி.காவியா மற்றும் ராமநத்தம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரி தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதால் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.