திட்டப் பணியை முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் சிவ பத்மநாதன் தொடங்கி வைத்தார்

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பால சரஸ்வதி முருகையா அவர்களின் கவுன்சிலர் நிதியிலிருந்து.
கீழக் கலங்கல் ஊராட்சி எட்டாவது வார்டு சிமெண்ட் சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 6.85 லட்சம் நிதிக்கான பணி தொடங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பால சரஸ்வதி முருகையா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
ஒன்றிய துணைப் பெருந்தலைவர் செல்வக் கொடி ராஜாமணி ஒன்றிய கவுன்சிலர்கள் வள்ளியம்மாள் முருகேசன், பழனி என்ற பால் துரை, முத்தம்மாள் புரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் பி முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டப் பணியை முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
நிகழ்ச்சியில் ஊத்துமலை தங்கதுரை செல்லத்துரை எல் எஸ் கண்ணையா கார்த்திக் முத்து, ராக்கெட் மகன் கோல்டன் ராஜா, கோஸ் பாண்டியன், அருணா பாண்டியன், மனோஜ் இளைஞர் அணி அசோக் காதர் மைதீன் அசார் கருப்பசாமி கிளைக் கழகச் செயலாளர் மகேந்திரன், மன்ற பொருளாளர் மகேஷ் மாரிமுத்து ரத்தினசாமிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி உறுப்பினர் செளந்தரி அவர்கள் நன்றி கூறினார்.