திண்டுக்கல் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் பகுதியில்
மாவட்ட விளையாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச. விசாகன் இ.ஆ.பா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மற்றும் பல்வேறு பள்ளிகளின் விளையாட்டு அலுவலர்கள் துரைராஜ், விக்டர், ராஜலட்சுமி மற்றும் விளையாட்டு துறை பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.
இப் போட்டியில் 260க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகள் 6 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில்
முதல் பரிசு ரூபாய் 5000 இரண்டாம் பரிசு ரூபாய் 3000 மூன்றாம் பரிசு ரூபாய் 2000
4 முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 250 பரிசு என மொத்தம் 70,500 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெரும் நபருக்கு திண்டுக்கல் தடகள சங்கங்கள் வழங்கிய புதிய சைக்கிள் ஒன்றும் பரிசும் வழங்கப்போவதாக கூறப்படுகிறது.
