திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரியார் பிறந்த தினம் விழா கொண்டாட்டம்.

திண்டுக்கல் செய்தியாளர் அழகர்சாமி
திண்டுக்கல் செப்டம்பர் -18 தந்தை பெரியாரின் 144 வது பிறந்த தின விழா நேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளால் கோலகாலமாக கொண்டாடப் பட்டது.
இதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாநகராட்சி அருகில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று திமுக சார்பில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் துணை மேயர் ராஜப்பா ,மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கதிரேசன், மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ், சுரேஷ், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஜெயன், ஒன்றிய குழு தலைவர் ராஜா, மண்டல தலைவர்கள் பிலால் உசேன், ஜான் பீட்டர், ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிலக்கோட்டை:,
நால்ரோட்டில் பெரியார் படத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் திமுக மாவட்ட இளைஞரணி தலைவர் சாந்தி, சரவணன் திமுக நகர செயலாளர், ஜோசப் கோவில் பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் நாகராணி, மாவட்ட பிரதிநிதி துரைப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர் பங்கேற்றனர்.
கொடைக்கானல்;,
மூஞ்சி கல்லில் வைத்திருந்த பெரியார் படத்திற்கு திமுக நகர செயலாளர் கருப்பையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . இதில் நகர மன்ற தலைவர் செல்லத்துரை, நகர செயலாளர்கள் முகமது இப்ராஹிம், ( திமுக) தாயகம் தாவூத் (அதிமுக ) சின்னு (சிபிஎம், )ஆண்டி (விசிக) திமுக நகர பொருளாளர் நைனார் பங்கேற்றனர்.

ஒட்டன்சத்திரம் :,
திமுக சார்பில் விருப்பாச்சி சமத்துவ புரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது ன.
இதில் மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட துணை செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன் தங்கராஜ் தர்மராஜன் நகர செயலாளர்கள் வெள்ளைச்சாமி,
தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன் ஆறுமுகம் ஒன்றிய தலைவர் அய்யம்மாள், நகரமன்ற தலைவர் திருமலைச்சாமி ,மாவட்ட இணைப்பாளர்கள் பாண்டியராஜன், ஆனந்தராஜ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக், வேலுச்சாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார், ராமகிருஷ்ணன்,

ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்விழிச்செல்வி, பன்னீர்செல்வம், சக்திவேல் ,மாலதி ,வெண்ணிலா ஜெயராணி, சாரதா சிவராஜ் , காமராஜர் மார்க்கெட் சங்கத் தலைவர் பாலு ,செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் பலர்கலந்து கொண்டனர்.
ஆத்தூர்:,
சீவல் சரகு பெரியார் நினைவு சமத்துவ படத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஒன்றிய தலைவர் மகேஸ்வரி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ராமன், முருகேசன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஊராட்சி தலைவர் ராணி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கன்னிவாடி:,
தந்தை பெரியாரின் படத்திற்கு பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி ,செயல் அலுவலர் ஜெயமாலு ,பேரூர் செயலாளர் இளங்கோவன், முன்னாள் செயலாளர் சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நத்தம்:,
பெரியார் படத்திற்கு முன்னால் எம்எல்ஏ ஆண்டி அம்பலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன், பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா, பேரூர் செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார் , பழனிச்சாமி , தர்மராஜ் ,மோகன் சேர்மன் பழனியம்மாள் , துணை சேர்மன் ராமதாஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
வடமதுரை:,
பேரூராட்சி தலைவர் கிருபா ராணி தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
வத்தலகுண்டு:,
அருகே குன்னுவரான் கோட்டை சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு விசிக மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதே போல் திக, விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் கட்சியினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் அனைத்து விழாக்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
