திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி வெட்டிக்கொலை. கணவன் விருவீடு போலீசில் சரண்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோடடையை சேர்ந்தவர் செல்லப்பாண்டி வயது 46 அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றார்.
இவரது மனைவி அஞ்சு லட்சுமி. வயது 36. இவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரண்டு குழந்தைகள். அஞ்சு லட்சுமியும் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி நடத்தை மீது செல்லப்பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அது தொடர்பாக கணவன் மனைவி இடையே வாய் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்றும் வழக்கம்போல இதே பிரச்சனையால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்லபாண்டி மனைவி அஞ்சு லட்சமியை வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரியாக கழுத்தில் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அஞ்சு லட்சுமி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். செல்லப்பாண்டி விருவீடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், விருவீடு சார்புஆய்வாளர் கலையரசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து அஞ்சுலட்சுமி பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்துமேலும் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.