தினமும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யாமல் வாகனத்தில் சுற்றிக்கொண்டு தீவிர வசூல் வேட்டையில் ஈடுபடும் விஏஓ நிவேதா குமாரி!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் உள்ள வண்டறந்தாங்கல் கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வருபவர் நிவேதா குமாரி. இவர் அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை.
சில புரோக்கர்களையும் ரியல் எஸ்டேட் அதிபர்களையும் கையில் வைத்துக் கொண்டு பட்டா மாறுதலுக்காகவும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து வழங்குவது என சில கருப்பு ஆடுகளை வைத்துக் கொண்டு தில்லாலங்கடி வேலைகளை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இவரைப் பற்றி குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் எல்லாம் தவறுதலாக பட்டா மாற்றி கொடுத்து பணத்தை வாரி சுருட்டி வந்துள்ளார். அதேப்போல் லஞ்ச பணத்தில் திளைத்து வருகிறார். இவர் அலுவலகத்திற்கு வரும்போது நகைக்கடை பொம்மை போல் நகைகளை வாரி அணிந்து கொண்டு நடமாடும் நகை கடல் போன்று அலுவலகத்துக்கு வரும் ஒரே விஏஓ இவர்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
இவர் கிராம விஏஓவா இல்லை நகை கடை பொம்மையா? என்பது புரியாத புதிராக உள்ளது எனவும் தெரிவித்து வருகினறர். அலுவலகத்திற்கு எப்போவது வரும் போது அங்குள்ள பொதுமக்களை மிக கேவலமாக பேசுவதும் உங்களுக்கு வேறு வேலை இல்லை இங்கு வந்து ஏன் என் கழுத்தை அறுக்குறீங்க என நாயை விட கேவலமாக பேசுவதாக அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் குமுறி வருகின்றனர்.
இந்த லஞ்ச பேர்வழி நிவேதா குமாரியை லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக கண்காணித்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தால் இதுபோன்று ஒரு தவறு எந்த அலுவலகத்திலும் நடைபெறாமல் இருக்கும்
என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். புறம்போக்கு இடங்களை தேடிப்பிடித்து விற்பனை செய்கிறார். ரூ.30 ஆயிரத்துக்கு வீட்டுமனை விற்கப்படுகிறது. தனக்கு உயரதிகாரிகள் உதவுவார்கள் என்று மார்தட்டுகிறார்.
தனது அலுவலகத்தில் சிசிடிவி கேமிரா பொருத்தியுள்ளார். இவரது கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு விரைவில் வருவாய்துறை தீர்வு காணுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்